சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம் …. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.44 ஆயிரம் கோடி லாபம்…. சென்செக்ஸ் 173 புள்ளிகள் வீழ்ச்சி…..

    0
    1
    பங்கு வர்த்தகம்

    இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 173 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

    இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடக்கத்தில் சுமார் 250 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்டது. ஆனால் பின்னர் ஆயிரம் புள்ளிகளுக்கு ஏற்றம் கண்டது. ஆனால் இந்த உயர்வு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக இல்லாததே இதற்கு காரணம். இறுதியில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.

    சன்பார்மா

    சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி., சன்பார்மா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மாருதி மற்றும் டெக் மகிந்திரா உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில் டைட்டன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் ஐ.டி.சி. உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

    டி.சி.எஸ்.

    மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,495 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 858 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 161 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.116.80 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.44 கோடி லாபம் கிடைத்தது.

    பங்கு வர்த்தகம்

    இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 173.25 புள்ளிகள் சரிந்து 29,893.96 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 43.45 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 8,748.75 புள்ளிகளில் நிலைகொண்டது.