சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது

  0
  1
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்தது.

  கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு கண்டது. பல முன்னணி நிறுவனங்களின் நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் திருப்திகரமாக இல்லை. சீனாவின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் மோசமாக இருந்தது போன்ற எதிர்மறையான தகவல்கள் இருந்தபோதிலும் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

  சீனா

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், ஐ.சி.ஐ.சி,ஐ. வங்கி, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், மாருதி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. வேதாந்தா, இண்டஸ்இந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி. மற்றும் டாடா ஸ்டீல் உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,004 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,506 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 172 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை  மதிப்பு ரூ.152.28 லட்சம் கோடியாக இருந்தது.

  இண்டஸ்இந்த் வங்கி

  இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 170.42 புள்ளிகள் உயர்ந்து 40,286.48 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 31.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,872.10 புள்ளிகளில் முடிவுற்றது.