சராசரி இந்தியர்கள் வருடத்தில் மொபைல் பார்க்கும் நேரம் எவ்வளவு தெரியுமா… ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்..!?

  0
  13
  representative image

  ‘ஸ்மார்ட்போன் மற்றும் மனித உறவுகளில் அவற்றின் தாக்கம்’ என்ற தலைப்பில்,
  மொபைல் சாதனங்கள் அவற்றை பயன்படுத்துவோரின் அன்றாட வாழ்க்கையையும் அவர்களைச் சுற்றியுள்ள உறவுகளையும் எந்தளவுக்கு மாற்றியமைக்கிறது என்பதை அறிய, ‘சைபர்மீடியா ரிசர்ச் (சிஎம்ஆர்) உடன் இணைந்து, விவோ (Vivo) பிராண்ட் ஸ்மார்ட்போன் நடத்திய ஆய்வில் தெரிய வந்த அத்தனையும் அதிர்ச்சி ரகம்! 

  ‘ஸ்மார்ட்போன் மற்றும் மனித உறவுகளில் அவற்றின் தாக்கம்’ என்ற தலைப்பில்,
  மொபைல் சாதனங்கள் அவற்றை பயன்படுத்துவோரின் அன்றாட வாழ்க்கையையும் அவர்களைச் சுற்றியுள்ள உறவுகளையும் எந்தளவுக்கு மாற்றியமைக்கிறது என்பதை அறிய, ‘சைபர்மீடியா ரிசர்ச் (சிஎம்ஆர்) உடன் இணைந்து, விவோ (Vivo) பிராண்ட் ஸ்மார்ட்போன் நடத்திய ஆய்வில் தெரிய வந்த அத்தனையும் அதிர்ச்சி ரகம்! 

  smartphone-use

  இந்த ஆய்வு இந்தியாவில் முக்கியமான எட்டு நகரங்களில், 18 முதல் 45 வயது வரையிலான சுமார் 2,000 நபர்களிடம் நடத்தப்பட்டு அதன் அடைப்படையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 36 சதவீதம் பெண்களும்   
  64 சதவீதம் ஆண்களும் கலந்து கொண்டனர். அதன் முடிவில் ,ஒரு இந்தியர் சராசரியாக ஆண்டுக்கு 1,800 மணி நேரத்தை தங்கள் ஸ்மார்ட்போனில் செலவிடுகிறார்களாம்! 

  girl-using-mobile

  இந்தியாவின் இணையதள பயன்பாட்டை ஜியோவுக்கு முன் ஜியோவுக்கு பின் என்று பிரிக்கலாம். அந்த அளவிற்கு இணையதள சேவையில் பெரிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டது ஜியோ. இளைஞர்கள் நாள் முழுவதும்  தங்கள் மொபைலை பார்த்தபடியே  இருக்கின்றனர். உலகமே அழிந்தாலும் கவலையே படாமல்  மொபைலைப் பார்ப்பதை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருக்கிறார்கள். ஊர் உலகத்தில் இருக்கிற ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு நடிகனா,நடிகையோ,பாடகரோ இருக்கிறார் என்பதே நமக்கு ‘டிக்ட்டோக்’  வந்த பிறகுதானே தெரிய வந்தது.

  இந்த ஆய்வில் ஒரு சராசரி இந்தியர் தங்கள் விழித்திருக்கும் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கை தங்கள் ஸ்மார்ட்போனிகளில் செலவிடுகிறார், இவர்கள் இப்படி ஒவ்வொரு நாளும் மொபைல் பார்க்கிற நேரத்தை மொத்தமாக கனக்குப் போட்டால்,ஆண்டுக்கு சுமார் 1,800 மணி நேரம் பார்ப்பதாக தெரியவந்திருக்கிறது. 

  guy-using-mobile

  ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 75 சதவீதம் பேர் தங்கள் பள்ளிப்பருவத்தில் ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருந்ததாகவும், 41 சதவீதம் பேர் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறுவதற்கு முன்பே ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

  இதன் விளைவு என்னவென்றால், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும்போது இப்போது 30 சதவிகிததிற்கும் குறைவான மக்களே தங்கள் குடும்பத்தினருடன்  போதிய அளவு நேரம் செலவழிக்கின்றனர். 

  மேலும், ஆய்வில் பதிலளித்த மூன்றில் ஒருவர், தாங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் போதும் கூட, ஐந்து நிமிடதிற்கு மேல் செல்போனை பார்க்காமல் இருக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலை கூறியிருக்கின்றனர்.

  மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பழக்கம் இதேபோல் தொடர்ந்தால் அது தங்களின் மனநிலை மற்றும்  உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று சுமார் 73 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டனர். ஐந்து பேரில் மூன்று பேர் மொபைல் ஃபோனை வாழ்க்கையில் இருந்து விலக்கி தனியே வாழ்வது முக்கியம் என்று கூறுகிறார்கள், இதுவே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும் என்று பிரபு ராம்(சி.எம்.ஆரின் தொழில்துறை புலனாய்வுக் குழுவின் தலைமை) என்பவரும் கூறுகின்றார்.