சம்மர் ஸ்பெஷல்: வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்கணுமா? இதை மட்டும் செய்யுங்க பாஸ்!

  0
  10
  கோடை

  கோடை வெயில் ஆரம்பித்ததிலிருந்தே வெயில் மண்டையைப்  பிளக்க ஆரம்பித்து விட்டது. வெயிலினால் நாம் விரைவிலேயே சோர்ந்து விடுகிறோம். வெயிலின் தாக்கத்தால்  உடல்நலத்திலும் எதிர்மறையான பிரச்னைகள் ஏற்படுவதோடு,  சுகாதார பிரச்சினைகளும் ஏற்படலாம்.

  கோடை வெயில் ஆரம்பித்ததிலிருந்தே வெயில் மண்டையைப்  பிளக்க ஆரம்பித்து விட்டது. வெயிலினால் நாம் விரைவிலேயே சோர்ந்து விடுகிறோம். வெயிலின் தாக்கத்தால்  உடல்நலத்திலும் எதிர்மறையான பிரச்னைகள் ஏற்படுவதோடு,  சுகாதார பிரச்சினைகளும் ஏற்படலாம்.

  குறிப்பாக உடலில் நீரிழிவு ஏற்படலாம். வெயிலினால்  ஏற்படும் சோர்வு   தலைவலி, மயக்கம் மற்றும் பிறர் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். மேலும் சிலருக்கு இதயம்  மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் சம்மர் சீசனில் இது போன்ற உடல் உபாதைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதைப்  பார்க்கலாம் வாங்க.

  வெப்பத்தைத் தவிர்க்கவும்

  summer

  வெப்பத்தை வெல்ல எளிதான வழி என்னவென்றால் அது சூரியனை தவிப்பது தான். குறிப்பாக 11 மணி முதல் மாலை  3 மணி வரை தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் இந்த நேரத்தில் முடிந்தவரை வெயிலில் அலையாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.  ஒருவேளை நீங்கள் வீட்டிலேயே இருப்பவராக இருந்தால் உங்கள் வீட்டின் ஜன்னல், கதவுகளை மூடி வையுங்கள். 

  முன்னெச்சரிக்கை நடவடிக்கை 

  curtains

  உங்கள் வீட்டில் உள்ள திரைச்சீலைகளின் வழியே ஒளி வராதவாறு  கனரக திரைச்சீலைகளை  பயன்படுத்தி  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்கள். அது  உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்

  உங்கள் உடலை குளிர்ச்சியாகவும்  வைத்திருங்கள்

  curtains

  வெயிலின் தாக்கத்தின் போது  நமக்கு நடக்கும்  மிக முக்கியமான ஒன்று, உடலில் நீர் வறட்சி. அதாவது நம் உடலில் உள்ள நீர் வெயிலின் தாக்கத்தால் வறண்டுவிடுகிறது. அதனால் முடிந்தவரை உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்.  தண்ணீர், பழச்சாறுகள் போன்ற திரவ ஆகாரங்களையும் , நிறைய தண்ணீரையும்  குடிக்க வேண்டும். 

  ஆடைகளில் கவனம் தேவை

  summer

  கோடை வெயிலை எதிர்கொள்ள நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் ஆடையில் கவனம் செலுத்துவது.  சரியான ஆடையைத் தேர்ந்தெடுத்து அணிவதால் குளிர்ச்சியாக இருப்பது போல உணர முடியும். கோடைக்காலத்தில் ஆடையைத் தேர்ந்தெடுப்பதில், வண்ணங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அடர் நிறங்களைவிட, வெளிர் நிற ஆடைகள்தான் கோடைக்கு ஏற்றவை. அடர் நிறங்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை அதிகமாக உள்ளிழுக்கும் தன்மை கொண்டவை. வெப்பத்தை உள்ளிழுப்பதால் அவை நம் உடலில் கசகசப்பை உருவாக்குகின்றன.அதனால்   பருத்தி மற்றும் கைத்தறி போன்ற துணிகள் கோடைக்கு சிறந்தவை. அதே போல்  வெளியில் செல்லும் போது மறக்காமல் தொப்பி மற்றும் சன் கிளாஸை கொண்டு செல்ல மறக்காதீர்கள். 

  வெப்ப பக்கவாதம் மற்றும்  வெப்ப சோர்வு அறிகுறிகள் 

   headache

  • தலைச்சுற்று
  • தலைவலி
  • வாந்தி
  • பலவீனம்
  • நெஞ்சு வலி
  • பிடிப்புகள்
  • அதிகமான தாகம்

   

  இதையும் வாசிக்க: சம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா? அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க!?