சம்பளம் கொடுக்க பணமில்லை… 36,000 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

  0
  1
  பிரிட்டிஷ் ஏர்வேஸ்

  இந்தியாவில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவைகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் விமான போக்குவரத்துக்கும் சிவில் விமான அமைச்சகம் தடை விதித்தது.  ரக்கு விமானங்களுக்கு அல்லது சிவில் ஏவியான் இயக்குநரகம் ஜெனரல் அனுமதித்தவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் அறிவித்தது.  

  British Airways cancels 'nearly 100 percent' of flights as pilots ...

  இந்நிலையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் 36 ஆயிரம் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக உள்ள விமானிகள், விமான நிலையப் பணியாளர்கள், பொறியாளர்கள், தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என 80 விழுக்காடு பேரை பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமான நிறுவன பணியாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் சர்வதேச விமான சேவையை ரத்து செய்துள்ளதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.