சம்பளம் இன்னும் வரல; வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய ஊழியர்கள் போராட்டம்

  0
  8
  வல்லபாய் படேல்

  வல்லபாய் படேல் சிலை (statue of unity) உருவாக்கத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  வல்லபாய் படேல் சிலை (statue of unity) உருவாக்கத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  statue of unity என்று அழைக்கப்படும் வல்லபாய் படேல் சிலையின் உருவாக்கத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி வைத்திருக்கிறது Updater Services Ltd  எனும் நிறுவனம். இதனால் 100-க்கும் அதிகமான ஊழியர்கள் வல்லபாய் படெல் சிலை அருகே மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு தொழிலாளர்கள், பாதுகாவலர்கள், தோட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படவில்லை.

  வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டும் அதன் உள்கட்டமைப்பு சரியாக இல்லை என புகார் எழுந்து வருகிறது. அதேபோல் இந்த சிலை அமைக்கப்பட்டதால் அங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.