“சமூக விலகலை கடைப்பிடித்தால் குலுக்கலில் பரிசு நிச்சயம்” : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

  0
  1
  திண்டுக்கல் சீனிவாசன்

  மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றாலும் மக்கள் சமூக விலகலை பின்பற்றவேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

  இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் பலியாகினர்.  

  tt

  இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றாலும் மக்கள் சமூக விலகலை பின்பற்றவேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 

  tt

  இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், திண்டுக்கல்லில் உள்ள 48 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு 2,500 ரூபாய் மதிப்பில்  39 வகையான மளிகை பொருட்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க உள்ளோம்.   இந்த பொருட்களை வாங்குவோருக்கு  குலுக்கல் முறையில் ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.