சமூக வலைத்தளங்களுடன் ஆதார் எண் இணைக்கக் கோரிய வழக்குகள்: உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

  5
  Linking aadhar number

  சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று நாடு முழுவதிலும் பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று நாடு முழுவதிலும் பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அஷ்வினி என்பவர் ஆதார் எண்களை சமூக வலைத்தள கணக்குகளுடன் இணைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

  Aadhar card

  அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எல்லா வழக்கையும் விசாரிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை, வேண்டுமானால் உயர்நீதி மன்றத்தில் மனு அளித்து இந்த வழக்கைத் தொடருங்கள் என்று கூறி அந்த வழக்கை விசாரிக்கவில்லை. சென்னை உயர் நீதி மன்றத்திலும் இது தொடர்பான பல வழக்குகள் பதிவாகியுள்ளன. 

  Supreme court

  இந்நிலையில், பல மாநிலங்களில் உள்ள உயர் நீதி மன்றங்களில் பதிவாகியுள்ள சமூக வலைத்தளங்களுடன் ஆதார் எண் இணைக்கக் கோரிய அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு  மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சமூக வலைத்தளங்களுக்கான நெறிமுறைகளை மூன்று மாதத்திற்குள் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.