சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் கைது.. பெண் கொடுத்த புகாரால் போலீசார் நடவடிக்கை!

  0
  3
  piyush manush

  வாடகை முறையாகக் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் வீட்டு உரிமையாளர் ஆஷாகுமாரி என்பவர் போலீசார் நேற்று புகார் அளித்திருந்தார். 

  சமூக ஆர்வலரான பியூஷ் மனுஷ் ஏரி, குளங்களைத் தானே தனது சொந்த செலவில் சுத்தப்படுத்துவது போன்ற பல விஷயங்களைச் செய்து வருகிறார். சமூக நலன்களில் அக்கரை கொண்ட இவர், சமூகம் சார்ந்த அனைத்து பிரச்னைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். காஷ்மீர் விவகாரம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்னைகைளில் மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், பியூஷ் மனுஷ் தன் வீட்டை அபகரித்துக் கொண்டு காலி செய்ய மறுப்பதாகவும், வாடகை முறையாகக் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும் வீட்டு உரிமையாளர் ஆஷாகுமாரி என்பவர் போலீசார் நேற்று புகார் அளித்திருந்தார். 

  tt

  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆஷாகுமாரி, பியூஸ் மானுஷ் வீட்டிற்குச் சென்று வீட்டை காலி செய்து கொள்ளுங்கள் என்று  சொன்னபோது அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார் என்றும் ஒரு வருடமாக வாடகை தரவில்லை என்றும் கூறினார். இதனையடுத்து, பியூஸ் அவர் வழக்குப் பதிவு செய்த போலீசார் பியூஷ் மனுஷை சேலத்தில் கைது செய்துள்ளனர்.