சமந்தாவுக்கு நன்றி கூறிய சின்மயி! எதுக்கு தெரியுமா?

  0
  1
  சின்மயி-சமந்தா

  நடிகை சமந்தாவிற்குப் பாடகி சின்மயி நன்றி தெரிவித்துப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

  சென்னை: நடிகை சமந்தாவிற்குப் பாடகி சின்மயி நன்றி தெரிவித்துப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

   பாடகி சின்மயி தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாகச் சந்தா கட்டாத காரணத்தால், சங்கத்திலிருந்து நீக்கப்படுவதாக சங்க தலைவர் ராதா ரவி அறிவித்திருந்தார். இதன் காரணமாகத் தமிழ்ப் படங்களில் 8மாத காலமாக டப்பிங் பேசாமல் இருந்து வந்தார் சின்மயி. 

  இவர் கடைசியாக  தமிழில் வெளியான 96 படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷாவுக்கு டப்பிங் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி அந்த படத்தில் பாடலும் பாடியிருந்தார். இதனை அடுத்து சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதால் தமிழ் படங்களில் இனி டப்பிங் பேசவே மாட்டார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் இவர் தற்போது மீண்டும் டப்பிங் பணிக்குத் திரும்பியுள்ளார்.

  இவர் தற்போது, நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ஓ பேபி படத்திற்கு தெலுங்கு மற்றும் தமிழ்  மொழிகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். இது குறித்து மகிழ்ச்சியுடன் சின்மயி ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார்.  அதில், ‘நான் டப்பிங் பேசியதற்குக் காரணமாக இருந்தவர்கள் சமந்தாவும், இயக்குநரும் தான்’ என்று இருவருக்கும் நன்றி கூறியுள்ளார்.