சபாஷ் நண்பர் ரஜினிகாந்த் அவர்களே, அப்படி வாங்க! இந்த வழி நல்ல வழி – கமல்ஹாசன் 

  0
  1
  rajini with kamal haasan

  ஊடகங்களை கைகூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள். மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என்னை பாஜகவின் ஆள் , பாஜகவுக்கு துணை போவதாக சொல்வது வேதனையளிக்கிறது.

  சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “ஊடகங்களை கைகூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள். மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என்னை பாஜகவின் ஆள் , பாஜகவுக்கு துணை போவதாக சொல்வது வேதனையளிக்கிறது. நான் பாஜக ஆதரவாளர் அல்ல. சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல்ஆளாக நிற்பேன் என்றுதான் கூறினேன். உண்மையை சொன்னால் பாஜகவின் ஊதுகுழல் என்கிறார்கள். டெல்லி வன்முறையை இரும்புகரம் கொண்டு ஒடுக்குங்கள், இல்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள்” என மத்திய அரசுக்கு எதிராக பேசியிருந்தார். 

   

   

  இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், “சபாஷ் நண்பர் 
  @rajinikanth அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை. வருக, வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.