சபரீசனுக்கு ஆப்பு வைத்த உதயநிதி! – தெருவுக்கு வந்த தி.மு.க குடும்ப சண்டை

  0
  11
   முக ஸ்டாலின்

  தி.மு.க-வில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக நிழலுக தலைவராக வலம் வந்தவர் சபரீசன். அடுத்த தலைவர் சபரீசனா என்று கேட்கும் அளவுக்கு அவருடைய ஆதிக்கம் கட்சியிலிருந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை முடிவு செய்யும் அளவுக்கு அதிகாரம் படைத்த நபராக வலம்வந்தார் சபரீசன். அவருடைய சில தவறான முடிவுகள் தி.மு.க-வின் வெற்றிக்கு ஆப்பு வைத்தது என்று தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பேசப்படுவது உண்டு.

  mkstalin

  தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி) அணியை சபரீசன் கவனித்து வந்தார். அவர் இந்த பணிகளை நிர்வகிக்க சுனில் என்பவரை கொண்டுவந்து நியமித்தார். சபரீசனும் சுனிலும் சேர்ந்து ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இல்லை என்கின்றனர் ஐடி விங் நிர்வாகிகள். சமூக ஊடகங்களில் ஸ்டாலினை பிரபலப்படுத்துகிறோம் என்று இவர்கள் செய்த காரியங்கள் எதிர்ப்பாகவே அமைந்தன. இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் சீட் வாங்கித் தருகிறேன் என்று கூறி சுனில் பலரிடமும் சில கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளார். சபரீசனுடன் நெருக்கமானவர் என்பதால், அவர் சொல்லித்தான் வாங்குகிறேன் என்று கூறியே வசூலித்துள்ளாராம். சுனிலின் வசூல் வேட்டை பற்றி உதயநிதி காதுக்கு தகவல் வந்துள்ளது.

  udayanidhi

   சுனில், சபரீசன் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று உதயநிதி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். தொடர்ந்து குற்றச்சாட்டு வரவே விசாரணையில் இறங்கியவருக்கு அதிர்ச்சி கிடைத்துள்ளது. பலரும் சபரீசன் பெயரைக் கூறி சுனில் வசூல் வேட்டையாடியதை பேட்டு உடைத்துவிட்டனர். இதனால் குடும்பத்தில் பிரச்னையாம். சபரீசனுக்கும் உதயநிதிக்கும் தகராறே வந்துவிட்டது. இருவரையும் குடும்பத்தினர் சமாதானம் செய்து வைக்க படாதபாடு பட்டுள்ளனர்.  கடைசியில் சுனிலை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டு பிரச்னை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  prasanth

  நீக்கினால் அசிங்கம் என்பதால் அவராக விலகும்படி கூறியுள்ளனர். சண்டை வெளியே தெரியாமல் இருக்க பெரிய கை ஒன்றை ஐ.டி-யை கவனித்துக்கொள்ள நியமிப்பது என்றும் முடிவெடுத்துள்ளனர். இதனால், மோடி, பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரைக் கொண்டுவந்துள்ளனர். பணம் படுத்தும் பாடு என்று தி.மு.க நிர்வாகிகள் தலையில் அடித்துக்கொண்டு இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அமைதிகாத்து வருகின்றனர்.