சபரிமலை தரிசனத்துக்கு ஆன்லைனில் புக் செய்த பெண்கள்! 

  0
  5
  சபரிமலையில் பெண்கள்

  சபரிமலை மகர ஜோதி பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ள நிலையில் 36 பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி கேட்டு ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். 

  சபரிமலை மகர ஜோதி பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ள நிலையில் 36 பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி கேட்டு ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். 

  சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

  சபரிமலை

  இதையடுத்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சபரிமலையில் பெண்கள் நுழைந்தது பெரும் பரபரப்பையும், போராட்டங்களையும் ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் சபரிமலைக்குள் பெண்கள் எப்படி அனுமதிக்கப்படுவர், அவர்களுக்கு கேரள மாநில காவல்துறையினர் எவ்வாறு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கடந்த ஆண்டு பெண்கள் சபரி மலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பு வெளியானபோது சுமார் 740 பெண்கள் சபரிமலை ஐயப்பனின் தரிசனத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியானவுடனே 36 பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.