சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்குப் பூஜை நிறைவு.. கோவில் நடை அடைப்பு !

  0
  1
  sabarimala

  நேற்று மண்டல விளக்குப் பூஜையையொட்டி, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் தங்க அங்கி ஐயப்பன் சுவாமிக்கு செலுத்தப்பட்டது.

  ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு மகர பூஜை மற்றும் மண்டல விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்படும்.கார்த்திகை பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இந்த மாதம் 27-ந் தேதியும் (நேற்று) , மகர விளக்குப் பூஜை ஜனவரி 15-ந் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 

  ttn

  நேற்று மண்டல விளக்குப் பூஜையையொட்டி, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் தங்க அங்கி ஐயப்பன் சுவாமிக்கு செலுத்தப்பட்டது.

  ttn

  இதனைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டை விட சுமார் 51 கோடி ரூபாய் அதிகமாகக் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மண்டல விளக்குப் பூஜை முடிந்த உடன் கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவிலின் நடை மீண்டும் 30 ஆம் தேதி மகர விளக்குப் பூஜைக்காகத் திறக்கப்பட உள்ளது.