சபரிமலையில் பணியின் போது தமிழக தொழிலாளி மரணம்!

  0
  6
  மாதிரி படம்

  தமிழகத்தில் இருந்து அதிகளவில், கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலைக்குச் செல்கின்றனர். இதனால் மகர ஜோதி தரிசனத்தையொட்டி நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சபரிமலையில் அதிகளவில் பக்தர்களின் கூட்டம் இருப்பதால், பாதுகாப்பு பணியில் சுமார் 23,000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

  sabarimalai

  இந்நிலையில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் நிரம்பி வழிவதால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரையில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்களும் சபரிமலையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தைச் சார்ந்தவர்களும் சபரிமலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
  சபரிமலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் குழுவில் மதுரையைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சபரிமலை சன்னிதானத்தில் துப்பரவு பணியில்  ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. திடீர் நெஞ்சுவலியால் அவதிபட்ட கணேசனை உடனடியாக சபரிமலை சன்னிதானத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அதன்

  death

  பின்னர் கணேசனை கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி கணேசன் இறந்தார். இதையடுத்து கணேசனின் உடல் ஐயப்பா சேவாசங்கம் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.