சபரிமலையில் காவலர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு! 

  0
  2
   Security guard dies at Sabarimala

  sabarimalai

  நாளை கார்த்திகை மாதம் துவங்க உள்ளதையடுத்து மண்டல பூஜைக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜைக்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வரும் என்பதால் பாதுகாப்பு பணிகளில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பிஜு இன்று நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

  malabar special police

  மலபார் சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர் பிஜு, சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக பம்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் பிஜு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.