சன் பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதில் ரஜினிக்கு பிரச்னை இல்லை என்றால், எனக்கும் இல்லை! – உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்

  0
  1
  udhayanidhi-vs-rajinikanth

  பல வன்முறை காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் சில இடங்களில் வசனங்களின் ஒலியை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  சன் பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதற்கு ரஜினிக்கு பிரச்னை இல்லை என்றால், அந்த படத்தை விநியோகம் செய்வதில் எனக்கும் பிரச்னை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

  psycho movie still

  பல வன்முறை காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் சில இடங்களில் வசனங்களின் ஒலியை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “படத்தில் காட்சிகள் எதையும் அகற்றும்படி தணிக்கை குழுவில் பரிந்துரைத்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், இதற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. உண்மையில் இது குழந்தைகளுக்கான படம் இல்லை” என்றார்.
  ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. அதன் விநியோக உரிமையை உதய நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றிருந்தது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ரஜினியின் அடுத்தப் படத்தை விநியோகம் செய்வீர்களா என்று உதயநிதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்தால், அதன் விநியோக உரிமை தானாக எனக்கு வந்துவிடும். இதில் அவருக்கு (ரஜினிக்கு) பிரச்னை இல்லை எனில், எதற்காக எனக்கு பிரச்னை வரப்போகிறது?” என்றார்.