சந்தேகத்தால் தோற்றுப் போன துரியோதனன்!

  0
  9
  துரியோதனன்

  ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்றார் வள்ளுவர்.  நம்ம வாழ்க்கையின் ஆக பெரிய எதிரியாக இருக்கும் நோய் எது என்று என்றைக்காவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? நம் வாழ்க்கையின் சந்தோஷத்தை சுக்கு நூறாய் உடைத்துப் போடுவது சந்தேகம் தானே? அது தான் நம் சந்தோஷத்தின் எதிரியாக இருக்க முடியும். நம் சந்தோஷாத்தின் எதிரியை நமக்குள்ளேயே வைத்துக் கொண்டு, நம் வளர்ச்சிக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். 

  ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்றார் வள்ளுவர்.  நம்ம வாழ்க்கையின் ஆக பெரிய எதிரியாக இருக்கும் நோய் எது என்று என்றைக்காவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? நம் வாழ்க்கையின் சந்தோஷத்தை சுக்கு நூறாய் உடைத்துப் போடுவது சந்தேகம் தானே? அது தான் நம் சந்தோஷத்தின் எதிரியாக இருக்க முடியும். நம் சந்தோஷாத்தின் எதிரியை நமக்குள்ளேயே வைத்துக் கொண்டு, நம் வளர்ச்சிக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம். 
   நாம் கற்ற நீதி கதைகளை எல்லாம் நம்மோடு வைத்துக் கொண்டு, அடுத்த தலைமுறையினரின் கைகளில் செல்போனைக் கொடுத்து விட்டு, அவர்கள் சரியாக வளரவில்லை என்று கவலைப்படுகிறோம். அடுத்த தலைமுறைக்கும் நீதிகதைகளையும், நம் இதிகாசங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தால், நல்ல குணநலன்களோடு அவர்களும் வீறு நடை போடுவார்கள். அவர்களது எதிர்காலமும் சந்தோஷத்துடன் இருக்கும். 

  duriyodaran

  இதற்கு மகாபாரதத்திலேயே மிகச் சிறந்த உதாரணம் இருக்கிறது.  மகாபாரத போரில், கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப் போவது உறுதியாகி விட்டது. யுத்தம் நிகழப் போவதை நன்கு அறிந்த கிருஷ்ணர், துரியோதனிடம் சமாதானம் பேசுவதற்காக  துாதுவனாகச் செல்கிறார். யுத்தம் வந்தால், கெளரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவருடைய மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என கிருஷ்ணருக்கு தெரியும். அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என கிருஷ்ணர் யோசித்தார். 
  அஸ்தினாபுரத்துக்கு தூதுவனாக சென்ற கிருஷ்ணர், திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர் என பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தார். அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தார். கிருஷ்ணர் அஸ்வத்தாமனை மட்டும் தனியாக அழைப்பதை துரியோனன் பார்த்துக் கொண்டிருந்தான். அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணர், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டார். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன். கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் பேசினார். அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான். பின், கிருஷ்ணனின் விரலில், மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.
  இதை எல்லாம்  பார்த்துக் கொண்டிருந்த துரியோதனன், ‘நான் கெளரவர்கள் பக்கம் இருந்தாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்’ என, கிருஷ்ணரிடம், அஸ்வத்தாமன் கூறியதாக மனதுள் நினைத்துக் கொண்டான்.  இந்த சந்தேகத்தால், அஸ்வத்தாமனை மகாபாரத போரில் கடைசி வரை சேனாதிபதியாக துரியோதனன் நியமிக்கவில்லை. 
  மகாபாரத போர் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 17ம் நாள் யுத்தத்தில் துரியோதனன் பீமனால் தாக்கப்பட்டு, கால்கள், தொடைகள் எல்லாம் உடைந்து, யுத்தகளத்தில் இருந்தான், அப்போது, அவனை அஸ்வத்தாமன் சந்தித்தான். ‘நான் சிரஞ்சீவி வரம் பெற்றவன். என்னை சேனாதிபதியாக நியமித்திருந்தால், யுத்தத்தின் முடிவு மாறியிருக்கும்’ என்றான் அஸ்வத்தாமன். அதற்கு துரியோதனன், ‘நீ தான், பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கிருஷ்ணனிடம் சத்தியம் செய்து கொடுத்தாயே’ என, கேட்டான்.

  krishnar

  ‘யார் சத்தியம் செய்தது’ என கேட்ட அஸ்வத்தாமனிடம், கிருஷ்ணன் துாது வந்த போது நடந்த சம்பவத்தை தெரிவித்தான் துரியோதனன். இதை கேட்ட அஸ்வத்தமான் விரக்தியில் சிரித்தான். ‘கிருஷ்ணனின் விரலில் இருந்த மோதிரம் கீழே விழுந்தது. அதை தான் எடுத்து கொடுத்தேன். சத்தியம் எதுவும் செய்யவில்லை. என் மீது சந்தேகப்பட்டு, உன் தோல்வியை நீயே தேடி கொண்டாய். அப்போதே இது பற்றி என்னிடம் கேட்டிருந்தால், நடந்தது தெரிந்திருக்கும். இதுவும், அந்த கிருஷ்ணனின் விளையாட்டு தான்’ என்றான் அஸ்வத்தாமன்.
  சந்தேகம் ஏற்பட்டால் உடனே அது பற்றி சம்பந்தபட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மனதுள் உங்களுடைய சந்தேக விதையைத் தூவி யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தால், நாளுக்கு நாள் அந்த சந்தேக விதை, விருட்சமாக வளர்ந்து கொண்டே செல்லும்.