சந்திக்க வராதீர்கள்! – வாசலிலேயே அறிவிப்பு வைத்த தமிழக அமைச்சர்

  0
  8
  அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வீடு

  தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய வீட்டின் வாசலிலேயே அறிவிப்புப் பலகை வைத்துள்ளார்.
  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனின் வீடு உள்ளது.

  sengottaiyan

  வீட்டுக்கு நுழையும் பிரதான கேட்டில்,கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அடிப்படையில் மாா்ச் 31ம் தேதி வரை தன்னை சென்னையிலும் கோபிசெட்டிபாளையம் இல்லத்திலும் யாரும் சந்திக்க வர வேண்டாம்” என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில், குறிப்பாக கோவை, ஈரோடு பகுதியில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் வித்தியாசமாக பார்த்துச் செல்கின்றனர்.