சந்தானத்துடன்  “டிக்கிலோனா” படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்! 

  0
  3
  Dikkiloona

  பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், கார்த்திக் யோகி இயக்கும் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், கார்த்திக் யோகி இயக்கும் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தமிழில் ட்வீட் செய்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். இவரது சென்னை தமிழின் ட்வீட்களுக்கு பல புள்ளைங்கோக்கள் அடிமை…. இந்நிலையில் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதை தெரியப்படுத்தியுள்ளார். 

  ஹர்பஜன் ட்வீட்
  இதுதொடர்பாஜ ஹர்பஜன் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் , “என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர் ஸ்டுடியோஸ், டிக்கிலோனா படக்குழு, சந்தானம் உள்ளிட்டோருக்கு நன்றி. தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம் அவர் 3 வேடங்களில் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்கும் நடிப்பது உறுதியாகியுள்ளது.