சந்தானத்துடன் இணைந்த பிக்பாஸ் சர்ச்சை நடிகை! 

  0
  1
  சந்தானம், மதுமிதா

  சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிக்க நடிகை மதுமிதா ஒப்பந்தமாகியுள்ளார். 

  சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிக்க நடிகை மதுமிதா ஒப்பந்தமாகியுள்ளார். 

  இயக்குநர்  கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இந்த  படத்தில்,  நடிகைகள் அனகா மற்றும் ஷிரின் இருவரும் நடிக்கின்றனர். இவர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன்,  நான் கடவுள் ராஜேந்திரன், ஷாரா ஆகியோர் நடிக்கின்றனர். சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

  Mathumitha

  இந்நிலையில் டிக்கிலோனா படத்தில் சந்தானத்துடன் நடிகை மதுமிதா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த படத்தில் நடிகை மதுமிதாவிற்கு வழக்கறிஞர் வேடமாம். படப்பிடிப்பு தளத்தில் சந்தானமும், மதுமிதாவும் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வைரலாகிவருகிறது. ஏற்கனவே ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம், மதுமிதா காம்போ ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.