சட்டீஸ்கரில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் என பெயர் சூட்டினர்

  0
  3
  twin babies

  சட்டீஸ்கரில் மாநிலம் ராய்ப்பூரில் புதிதாக பிறந்த இரட்டையர்களுக்கு கொரோனா & கோவிட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

  ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மாநிலம் ராய்ப்பூரில் புதிதாக பிறந்த இரட்டையர்களுக்கு கொரோனா & கோவிட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

  சட்டீஸ்கரில் மாநிலம் ராய்ப்பூரில் மார்ச் 26, 27 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் ஒரு பையன், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். புதிதாக பிறந்த அந்த இரட்டையர்களுக்கு கொரோனா & கோவிட் என்று பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.

  ttn

  இதுகுறித்து அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் கேட்டதற்கு, “அவர்கள் பிறந்த காலத்தில் கஷ்டங்களை வென்றது பற்றி நினைவூட்டும் பெயர்களாக இருக்கும். ஏனெனில் நாடு ஒரு கொடிய தொற்றுநோய்க்கு எதிராக ஒன்றாக போராடியது. மருத்துவமனை ஊழியர்களும் குழந்தைகளை கொரோனா மற்றும் கோவிட் என்றே அழைக்கத் தொடங்கினர். அதனால் கொரோனா தொற்றுநோய் தொடர்பாக பெயரிட முடிவு செய்தோம்” என்று கூறினர்.

  ஆனால் பின்னர் கொரோனா பாதிப்பு நாட்டில் முடிவுக்கு வந்ததும் குழந்தைகளின் பெயர்களை மாற்றலாம் என்று பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.