சட்டப்பூர்வமாக அனுமதி பெற்றுவிட்டு பேனர் வைத்தால் தவறில்லை – கமல்ஹாசன்!

  0
  1
  Kamalhassan

  சட்டப்பூர்வமாக அனுமதிபெற்றுவிட்டு யார் வேண்டுமானாலும் பேனர் வைக்கலாம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

  சட்டப்பூர்வமாக அனுமதிபெற்றுவிட்டு யார் வேண்டுமானாலும் பேனர் வைக்கலாம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

  உலக சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்காக பி.வி.சிந்துவுக்கு சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த சிந்து கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அதன்பின் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். 

  PV Sindhu
  அப்போது பேசிய கமல்ஹாசன், “சீன அதிபர் தமிழகம் வருவது வரவேற்கத்தக்கது. 60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் தமிழகம் வருவது. இந்த சந்திப்பி போது இரு நாட்டு வளர்ச்சி தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பூர்வமாக அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் பேனர் வைக்கலாம்” என்று கூறினார். 

  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிந்து,  “கமல் நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவர். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி வெற்றியை தனதாக்கிக் கொள்ள பாடுபட வேண்டும்” என்று தெரிவித்தார்.