சச்சின் டெண்டுல்கரை உருவாக்கிய பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் காலமானார்!

  0
  10
  ramakant achrekar

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் இன்று காலமானார். 

  மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் இன்று காலமானார். 

  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என புகழப்படும் சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் போன்ற பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். 

  sachin

  சச்சின் இந்த அளவு கிரிக்கெட்டில் தேர்ச்சி பெற, அவர் சிறுவனாக இருந்த போது அவருக்கு பயிற்சி அளித்த ராமாகந்த் அச்ரேக்கர் என்ற பயிற்சியாளர் தான் முக்கிய காரணம் என பல தருணங்களில் சச்சினே தெரிவித்துள்ளார். 

  எந்த நிலைக்கு சச்சின் உயர்ந்தாலும், இவரின் பெயரை குறிப்பிடத் தவறியதே இல்லை. தன் ஆரம்ப கால பயிற்சியாளர் மீது அந்த அளவிற்கு மரியாதை வைத்திருந்தார் சச்சின். சச்சினுக்கு பயிற்சியளித்ததற்காக மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதையும் ராம்காந்த் அச்ரேக்கர் பெற்றுள்ளார். 

  ramakanth achrekar

  இந்நிலையில், மும்பையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ராமாகந்த் அச்ரேக்கர், இன்று மாலை 6.30 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 87.