சசிகலா குடும்பத்தில் குழாயடி சண்டை… ஜாகுவாரில் சவாரி..!

  16
  டி.டி.வி.தினகரன்

  நீங்க பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் என்றால், நாங்களும் முதலமைச்சர் என்று கோஷம் போடனும்? நீங்க அவர் வேண்டாம் என்றால் நாங்களும் வேண்டாம் என்று சொல்லனும்.

  டி.டி.வி.தினகரனுக்கும், திவாகரன் மகன் ஜெயானந்துக்கும் நடக்கும் சண்டைக்கு நாங்கள் பலி கடாவா? என பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

  இதுகுறித்து திவாகரன் மகன் ஜெயானந்துக்கு அவர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’நீங்கள் நான் மிகவும் நேசிக்கும் சகோதரர். உங்களிடம் ஏட்டிக்கு போட்டி பேச நான் விரும்பவில்லை. இருந்தும் சில விஷயங்களை இன்று பொதுவில் வைக்கின்றேன். நீங்க அரசியலுக்கு வருவதையோ அல்லது உங்கள் குடும்பம் சார்ந்த மற்றவர்கள் வருவதையோ நானோ அல்லது எவருமே கூட தடுக்க முடியாது , அது உங்கள் உரிமை.

   ttv dhinakaran

  ஆனால் என் கேள்வி சிம்பிள், இன்றைக்கு ஆர்.கே.நகரில் ஜாகுவாரில் பவனி வந்ததை போல 2015 இல் வந்தீர்களா ? அல்லது அப்பொழுது உங்களிடம் ஜாகுவார் கார் இல்லையா? நிதர்சனத்தை அடிப்படையாக வைத்து நாம பேசுவோம்.

  sasikala

  ஏன் பாஸ், நீங்க பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் என்றால், நாங்களும் முதலமைச்சர் என்று கோஷம் போடனும்? நீங்க அவர் வேண்டாம் என்றால் நாங்களும் வேண்டாம் என்று சொல்லனும். நீங்க எடப்பாடி என்றால் நாங்களும் அதை ஆமோதிக்கனும், நீங்க அதே எடப்பாடியை வேண்டாம் என்றால் நாங்கள் வெறுக்கனும்.  நீங்க தினகரன் என்றால் நாங்களும் பின் வரனும், நீங்க அவர் வேண்டாமென்றால் நாங்களும் ஒதுக்கனும். இதுல விசேஷம் என்னன்னா, நடுவுல எங்க நகை காசு பணம் எல்லாத்தையும் அடகு வைச்சோம். நீங்க எதை வைத்தீர்கள் ?ttv dhinakaran

  இது உங்கள் தகுதியை கேள்வி கேட்கும் பதிவல்ல, அந்தத் தகுதி எனக்குமில்லை. ஆனால் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லுங்க, உங்க பங்காளி சண்டைக்கு தொண்டன் தக்காளி தொக்காகணுமா?’’ எனக் கேட்டுள்ளார்.