சசிகலா உறவினர்கள் கலக்கம்… ஜெயிலுக்குள்ள சின்னம்மா பார்க்குற வேலையை பார்த்தீங்களா..?

  0
  3
  சசிகலா

  ஜெயிலில் இருந்தாலும் அன்கிருந்தே வரவு, செலவு கணக்கை பார்த்து வருகிறார் மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

  சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருக்கிறார். மதுபான ஆலை, தேயிலை தோட்டம், டிவி சேனல், தியேட்டர் என சசிகலா உறவினர்கள், பல தொழில்கள்ல ஈடுபட்டு இருக்கிறார்கள். அதெல்லாம் சசிகலா ஆசியால் தொடங்கப்பட்டவை.

  இதனால் அவரவர் வரவு, செலவு விபரங்களை ஜெயிலில் இருக்கிற சசிகலாவிடம், அவ்வப்போது தெரிவித்து வருகிறார்கள். அதில் சில கணக்குகளை மறைக்க, யாராவது முயற்சி செய்தால் அடுத்த முறை வருகிறபோது அந்த கணக்கு வேண்டும் என கறாராக உத்தரவு போடுகிறார் சசிகலா. கணக்கு வழக்கு சரியாக இருந்தால் அவர் ஏன் ஜெயிலுக்குள் போய் இருக்கணும்?