சசிகலாவை விமர்சித்ததால் வரவேற்போம்! – ஜெயக்குமார் அடடே பதில்

  0
  6
  minister-jayakumar

  அ.தி.மு.க அரசின் மைக் மன்னனாக இருப்பவர் ஜெயக்குமார். எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் ஜெயக்குமார் இன்றைக்கு தர்பார் படம் பற்றி கருத்து கூறியுள்ளார். விமர்சனங்கள் வரும்போது கொந்தளிக்கும் ஜெயக்குமாரா இப்படி என்று மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு அந்த விமர்சனம் இருந்தது.

  தர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்திருப்பதை வரவேற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
  அ.தி.மு.க அரசின் மைக் மன்னனாக இருப்பவர் ஜெயக்குமார். எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லும் ஜெயக்குமார் இன்றைக்கு தர்பார் படம் பற்றி கருத்து கூறியுள்ளார். விமர்சனங்கள் வரும்போது கொந்தளிக்கும் ஜெயக்குமாரா இப்படி என்று மூக்கின் மீது விரல் வைக்கும் அளவுக்கு அந்த விமர்சனம் இருந்தது.
  சென்னை ராயபுரத்தில் இன்று பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார். அப்போது, அவரிடம் நிருபர்கள் மைக் நீட்டினர். சளைக்காமல் பதில் அளித்த ஜெயக்குமாரின் பேட்டி விவரம்…

  jayakumar-pongal-gift-inaugration

  “பொங்கல் பரிசு நான்கு நாட்களுக்கு வழங்கப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்படும். ஒரு கடையில் 300 பேருக்கு தினமும் வழங்கப்படும். பொது மக்கள் காலையிலேயே வர வேண்டாம். இரவு 7 மணி வரை கொடுக்கப்படுவதால் அமைதியாக வாங்கிச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
  தர்பார் படத்தில் சசிகலாவை விமர்சித்து காட்சிகள் உள்ளதாக நானும் கேள்விப்பட்டேன். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். ஆனால், படம் சிறைச்சாலை வரை பாய்ந்துள்ளது. இந்த கருத்து நல்ல கருத்துதான். இது சசிகலாவைப் பற்றிய கருத்தாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இது நல்ல கருத்து. பொது மக்கள் விரும்பும் கருத்தும் கூட. இதற்கு மேல் இது பற்றி கூற விரும்பவில்லை. தர்பாரைப் புகழ்வதாக எண்ண வேண்டாம், தர்பாரோ, பிகிலோ எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.