சசிகலாவை பிளாக் மெயில் செய்யும் தினகரன் ஒரு ஃபிராடு! – புகழேந்தி கடும் தாக்கு

  0
  14
   புகழேந்தி

  சென்னையில் அ.ம.மு.க புதிய அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய டிடிவி தினகரன், “சசிகலா விரைவில் சிறையிலிருந்து விடுதலை ஆக உள்ளார். வந்ததும் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட உள்ளார். அடுத்த சட்டமன்ற மன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளோம். அ.ம.மு.க-வுக்காக சசிகலா பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்” என்று எல்லாம் கூறியிருந்தார்.

  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒரு மோசடி பேர்வழி என்று அக்கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி தெரிவித்துள்ளார்.
  சென்னையில் அ.ம.மு.க புதிய அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய டிடிவி தினகரன், “சசிகலா விரைவில் சிறையிலிருந்து விடுதலை ஆக உள்ளார். வந்ததும் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட உள்ளார். அடுத்த சட்டமன்ற மன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளோம். அ.ம.மு.க-வுக்காக சசிகலா பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்” என்று எல்லாம் கூறியிருந்தார்.

  ammk

  இதற்கு கர்நாடக மாநில அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்தவரும் சமீபத்தில் அ.ம.மு.க-வில் இருந்து விலகியவருமான புகழேந்தி பதிலடி கொடுத்துள்ளார். “சசிகலா சிறையிலிருந்து வருவதால் எந்த மாற்றமும் வந்துவிடாது. சசிகலாவை பிளாக்மெயில் செய்து வருகிறார் டிடிவி தினகரன். சிறையில் சசிகலாவை யாரும் சந்திக்க விடுவதில்லை. தினகரன் ஒரு ஃபிராடு. சசிகலாவின் பணத்தைக் கொள்ளையடிக்க நாடகமாடி வருகிறார். சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா அரசியலில் ஈடுபடமாட்டார் தினகரன் பசு தோல் போர்த்திய புலி. அவருக்கு சசிகலாவை வெளியே அழைத்துவரும் எண்ணம் இல்லை” என்றார்