சசிகலாவுக்கு சிறைக்குள் நேர்ந்த பரிதாபம்… பெரும் சோகத்தில் மன்னார்குடி வகையறாக்கள்..!

  0
  2
  டி.டி.வி.தினகரன்

  வெளியே சசிகலாவைப் பற்றி அரசியல் பகடைக் காய்கள் நகர்த்தப்பட்டு வரும் நிலையில், கடுமையான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார்

  பிடரி வலியினால் அவதிப்பட்டு வந்த சசிகலாவுக்கு சில நாட்களாகக் கண்களில் இருந்து தொடர்ச்சியாகக் கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. கண் நோய்களால் இது ஏற்படலாம் அல்லது தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் இதுபோன்று ஏற்படலாம். தொடர்ந்து கண்களில் நீர் வடிந்து கொண்டிருப்பதால் சசிகலா கடுமையாக அவதிப்படுகிறார். இதுமட்டுமல்ல, பிசியோதெரபி செய்யாததால் பிடரிவலி இப்போது நீண்டு கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். 

  இரவில் முதுகுவலியால் உறக்கம் வராமல், விழித்திருக்கும்போது கண்களிலிருந்து நீர் வடிவதால் எப்போதும் அழுதுகொண்டிருப்பதைப் போலவே காட்சியளிக்கிறார் சசிகலா. இதோடு சர்க்கரை அளவும் அதிகமாகிவிட்டது.

  குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள், கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகள், சிறைக்குள்ளும் தலை நீட்டும் அரசியல் நெருக்கடிகள் ஆகியவற்றால் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் சசிகலா. இதில் பிடரிவலி, முதுகுவலி, சர்க்கரை அதிகமானது, கண்களில் நீர் வடிதல் ஆகிய அனைத்தும் சேர்ந்து சசிகலாவின் உடல்நலனைக் கடுமையாக பாதித்திருக்கிறது . 

  அண்மையில் சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்த தினகரன், சிறப்பு அனுமதி பெற்று வெளியே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியும் சசிகலா மறுத்துவிட்டார். இளவரசி தினமும் சசிகலா படும்பாட்டைப் பார்த்து தாங்க முடியாமல் சசிகலா இப்படி இருப்பது ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்று தன்னை சந்திக்க வந்த உறவினர்களிடம் எச்சரித்திருக்கிறார்.

  வெளியே சசிகலாவைப் பற்றி அரசியல் பகடைக் காய்கள் நகர்த்தப்பட்டு வரும் நிலையில், கடுமையான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார் அவர். சட்ட நடவடிக்கைகள் மூலம் அவர் கூடிய சீக்கிரம் விடுதலையானாலும் தொடர் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சசிகலா என்கிறார்கள்.