சங்கி வழியை பின்பற்றும் காங்கிரஸ் எப்படி மதச்சார்பின்மையை நிலைநாட்டும்: பினராயி விஜயன்

  0
  8
  pinarayi

  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சங்கி வழியை பின்பற்றும் காங்கிரஸ் எப்படி மதச்சார்பின்மையை நிலைநாட்டும் என விமர்சித்துள்ளார்.

  கேரளா: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சங்கி வழியை பின்பற்றும் காங்கிரஸ் எப்படி மதச்சார்பின்மையை நிலைநாட்டும் என விமர்சித்துள்ளார்.

  மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல் நாத், பசுக்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்தி வருகிறார். பசுவதை செய்ததாக மூவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருப்பது விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பினராயி விஜயன், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசின் முடிவு தவறானது. இது நம் தேசத்தின் மதச்சார்பற்ற பண்புக்கு எதிரானது. மதசார்பின்மையை விரும்புகிறோம் எனக் கூறும் காங்கிரஸ், பாஜக போல் பசுக்காவலர்களாய் மாறி வருகிறது. 

  காங்கிரஸ் ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார் கும்பல்களை பின்பற்றினால் மதச்சார்பின்மையை எப்படி நிலைநாட்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.