சங்கத்தமிழன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  0
  3
  சங்கத்தமிழன்

  காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும்

  சென்னை:  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

  vijay

  இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள  படம் ‘சங்கத்தமிழன்’. இதில் விஜய் சேதுபதியுடன் நடிகை ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்  இவர்களுடன் சூரி, நாசர், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  ஏற்கனவே கைதி. பிகில்  போன்ற திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சங்கத்தமிழன் ரிலீஸ் தள்ளிப்போனது.

   

  இந்நிலையில்  சங்கத்தமிழன் வரும் நவம்பர் 15ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.