சக நடிகர்களுடன் நான் நெருக்கமாக இல்லை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

  0
  11
  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

  தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

  தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த 10-ம் தேதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காதலில் விழுந்துவிட்டார் என்றும் விரைவில் இவருக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 

  அதை மறுத்து அவர் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டார். அதில், ‘நான் காதலிப்பதாக செய்திகள் பரவி வருவதை கேள்விப்பட்டேன். தயவு செய்து அவர் யார் என்று என்னிடம் கூறுங்கள். அவரை பற்றி தெரிந்து கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன். தயவு செய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள். அப்படி ஏதாவது நடந்தால் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன்’ என்று கூறியிருந்தார். 

  ஐஸ்வர்யா ராஜேஷ்

  இந்த நிலையில் இது குறித்து தற்போது பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘நான் காதலிப்பதாக எழுந்த வதந்தி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ‘நான் யாருடனாவது வெளியில் சென்றபோது, யாரோ அதைப் பார்த்து வதந்தியை உருவாக்கி இருக்கலாம். என் சக நடிகர்கள் யாருடனும் நான் நெருக்கமாக இல்லை. அனைவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்கிறது. 

  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

  அனைவரும் எனக்கு நல்ல நண்பர்கள். யாரையும் காதலிக்க எண்ணம் எனக்கு நேரமில்லை. அவ்வாறான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை. உறவு என்பது நான் மிகவும் போற்றக்கூடிய ஒன்று. எனது கடந்த கால உறவுகள் எதுவும் சில மாதங்கள் மட்டுமே இருந்தது கிடையாது. எல்லாமே நீண்ட நாட்கள் இருந்தது’ என்று கூறியுள்ளார்.