கௌதமி கமலை பிரிய காரணம் இந்த நடிகை தானா?! அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்!

  0
  14
  கமல்ஹாசன்

  கமல் திரையுலகிற்கு வந்த 60  ஆண்டுகள் ஆனதையொட்டி, கமலின் சொந்த நிறுவனமான  ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமலுக்கு  3 நாட்கள் விழா எடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று தனது  65-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதே சமயம் கமல் திரையுலகிற்கு வந்த 60  ஆண்டுகள் ஆனதையொட்டி, கமலின் சொந்த நிறுவனமான  ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமலுக்கு  3 நாட்கள் விழா எடுக்க ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே   கமல் ஹாசன் பரமக்குடியில் உள்ள தனது வீட்டில் தனது அப்பாவின் திருவுருவ சிலையைத் திறந்து வைத்தார். இந்த கொண்டாட்டத்தில் கமலுடன், அவரது அண்ணன்  சாருஹாசன், மகள்கள்  ஸ்ருதி மற்றும்  அக்ஷரா, நடிகர் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

  pooja

  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்று தற்போது பேசும் பொருளாகியுள்ளது. அது நடிகை பூஜா குமாரின் புகைப்படம் தான்.

  pooja

  கமல்ஹாசனின்  விஸ்வரூபம், விஸ்வரூபம்2 மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்த பூஜா குமார் கமலுடன் வெளிநாடுகளுக்குச் சென்று வந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில்   வைரலானது.

  kamal

  தற்போது கமல்ஹாசன் குடும்ப புகைப்படத்தில் பூஜா குமார்  இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கமல் ஹாசன்  வாணி கணபதி, சரிகா இருவரையும் திருமணம் செய்து விவாகரத்து செய்த நிலையில் கௌதமியுடன் வாழ்ந்து வந்தார்.

  pooja

  சமீபத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கௌதமியையும் பிரிந்தார். கௌதமியை பிரிய ஒருவேளை பூஜா குமார் காரணமாக இருப்பாரோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.