கோவை வீடு இடிந்து விபத்து… பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

  12
   கோவை

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுவீடுகள் இடிந்து விழுந்தது

  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓட்டுவீடுகள் இடிந்து விழுந்தது.  இதில் குரு (45), அரிசுதா (16), ராம்நாதன்(20), அட்சயா(7), லோகுராம்(7), ஒவியம்மாள்(50), நதியா(30), சிவகாமி(50), நிவேதா(20), வைதேகி(22), ஆனந்தகுமார்(46), திலாகவதி(50), அருக்கணி(55), ரூக்குமணி(40, சின்னமாள்(70) உள்ளிட்ட சுமார் 15 க்கும் மேற்பட்டோர்  இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளனர்.  இதுவரை  பலியான  17 பேரின் சடலங்கள்  மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

  ttn

  இந்நிலையில் விபத்து குறித்த  தகவலறிந்து சென்ற வட்டாட்சியர், போலீசார் மற்றும் மீட்பு படையினர்  தொடர்ந்து அங்கு மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.