கோவில் குளத்தில் தங்கம் இருப்பதாக கசிந்த செய்தி! கடைசியில் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… 

  0
  11
  கோவில் குளம்

  திருப்பூரில் உள்ள புகழ்பெற்ற வீரராகவன் கோவில் பெருமால் கோவில் தெப்பக்குளத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பதாக கூறப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இரவுப்பகலாக குளத்தை தூர்வாரினார். 

  திருப்பூரில் உள்ள புகழ்பெற்ற வீரராகவன் கோவில் பெருமால் கோவில் தெப்பக்குளத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருப்பதாக கூறப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இரவுப்பகலாக குளத்தை தூர்வாரினார். 

  கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ள தெப்பக்குளத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில்லறை காசுகளை போட்டு செல்வது ஐதீகம். இந்நிலையில் அந்த குளத்தில்  இந்நிலையில் இந்த குளத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க காசுகளும் நகைகளும் இருப்பதாக இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையருக்கு மொட்டை கடிதம் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அந்த குளத்தை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இதில் பல பக்தர்களும் கலந்துகொண்டனர். குளத்திலிருந்த நீர் அனைத்தையும் வெளியேற்றி சுத்தம் செய்யப்பட்டது.

  pond

  நிறைய தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரை தோண்டியும் தங்கம் கிடைக்கவில்லை மாறாக பக்தர்கள் வீசி சென்ற சில்லறை காசுகளே இருந்தன. அந்த சில்லறைகளை எடுத்து கோவில் உண்டியலில் போட்டுவிட்டு பக்தர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.