கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

  0
  10
  மனோகர் பாரிக்கர்

  கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (பாஜக) சற்று நேரம் முன்பு காலமானார்.

  கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (பாஜக) சற்று நேரம் முன்பு காலமானார். அவருக்கு வயது 63.

  கணைய புற்றுநோய் காரணமாக மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவந்தார். அதனைத் தொடர்ந்து கோவா திரும்பிய அவர், அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அரசுப் பணிகளில் மெல்ல ஈடுபட்டு வந்த மனோகர் பாரிக்கரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. கடந்த சில நாட்களாக நிலைமை மிகவும் மோசமான அவர், சற்று நேரம் முன்பு காலமானார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மனோகர் இறப்பை உறுதி செய்துள்ளார். மனோகர் பாரிக்கர் மறைவால் பாஜக இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.