கோவா படவிழாவில் விருது… தமிழ் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்த ரஜினி..

  0
  2
  Award

  இந்த விழாவின் முதல் நாளான இன்று நடிகர் அமிதாப் பச்சன், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி கோலாகலமாகத் துவங்கி வைத்தனர்.

  மத்திய அரசின் திரைத்துறை சார்பில் கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் 9 நாட்களுக்கு நடக்கவுள்ளது. இந்த விழாவின் முதல் நாளான இன்று நடிகர் அமிதாப் பச்சன், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி கோலாகலமாகத் துவங்கி வைத்தனர்.

  starting

  இந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சினிமா துறையில் பெரிய பங்களிப்பு ஆற்றிய நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  amithab bachan

  இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE” வழங்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

  rajini

  அதன் படி, இன்று ரஜினி காந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE”  என்ற விருதை பிரகாஷ் ஜவடேகர் வழங்கி கவுரவித்தார்.

  rajini

  விருது பெற்ற பிறகு அந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினி காந்த் , எனக்கு இந்த விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என்று ஆங்கிலத்தில் பேசினார்.

  rajini

  பின்னர்,  என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தமிழில் நன்றி தெரிவித்தார்.