கோழிக்கறி வழியாக கொரோனா பரவுகிறதா?… பரவும் தகவலால் கதறும் வியாபாரிகள்!

  0
  3
  கொரோனா வைரஸ்

  இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால்  சீனாவில் 1,662க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

  இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால்  சீனாவில் 1,662க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  ttn

  குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்குக் கூட இந்த நோய் பரவுவதால் சீன அரசு மக்களை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனாவை இந்த வைரஸில் இருந்து பாதுகாக்க மற்ற நாடுகள் சீனாவுக்கு உதவி வருகின்றன. மரணத்தையே முடிவாகக் கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  ttn

  இதனிடையே, சீனாவின் அண்டை நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை  விடுத்திருந்தது. அதனால், சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்குச் செல்லும் மக்கள் திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்நிலையில் இந்த வைரஸ் கோழிக்கறியின் மூலமாகத் தான் பரவுகிறது என்று சமீபத்தில் பரபரப்பான தகவல் வெளியானது. ஏற்கனவே கொரோனாவால் பீதியில் இருக்கும் மக்களை இந்த தகவல் குழப்பமடையச் செய்தது. இதன் எதிரொலியாக கோழிக்கறி விற்பனை அதிரடியாகக் குறைந்துள்ளது. 

  ttn

  இந்த வதந்தி பரவியதில் இருந்து இந்தியக் கோழிப்பண்ணைக்கு ரூ.1,310 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.70க்கு விற்கப்பட்டு வந்த பண்ணை விலை இப்போது ரூ.35க்கு விற்பனையாகிறது. இந்த விலை வீழ்ச்சி வியாபாரிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்த நிலை நீடித்து வந்தால் ஏப்ரல் மாதம் கோழி விலை அதிகமாகக் கூடும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதில், கோழிக்கறி மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.