கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்குகிறது!

    0
    1
     கொரோனா வைரஸ்

    இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  

     சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  

    ttn

    இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 10 லட்சத்து 97ஆயிரத்து 909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்  59,131பேர் பலியாகி  உள்ளனர் .  இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை அடுத்தகட்டத்தை நெருங்குகிறது.

    ttn

    அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தையும், பலியானோர்  எண்ணிக்கை 6 ஆயிரத்தையும் தாண்டியது. இதனால் அங்கு  கொரோனாவை கட்டுப்படுத்துவதற்குள்   2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை பலியாக வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டு அரசால் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.