கோட்சே வெறும் துப்பாக்கி தான்..‘காப்பான்’ மேடையில் சூர்யா அதிரடி!

  0
  4
  சூர்யா

  கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ‘கோட்சே காந்தியை சுட்ட பின்னர் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது எல்லோரும் வன்முறையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, ‘கேட்சேவின் அந்த துப்பாக்கியை எடுத்து சுக்குநூறாக உடைத்து விடுங்கள்’ என பெரியார் சொன்னார். 

  kaappaan

  அப்போது அய்யா நாங்கள் கோட்சேவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அவருடைய துப்பாக்கியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என அருகில் உள்ளவர்கள் அவரிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு கோட்சே வெறும் துப்பாக்கி தான் என சாதாரணமாக சொன்னார் பெரியார்” என்று விழாவில் பேசினார் சூர்யா. 
  மேலும் ஒவ்வொரு நிகழ்வின் போது ஒரு சித்தாந்தம் இருப்பதாக காந்தி கொலை மூலம் பெரியார் சுட்டிக்காட்டிருப்பதாக சூர்யா தெரிவித்தார். காப்பான் படத்தில் பல விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கும் என்றார். அண்மையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராகவும் பேசியிருந்தார். இதேபோல் முன்பு நடிகர் கமல் காந்தியை கொன்ற கோட்சே குறித்து பேசிய கருத்து சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருந்தது.

  kaappaan

  கோட்சே பற்றிய சூர்யாவின் பேச்சு, ‘காப்பான்’ படத்தின் கதையை ஓரளவுக்கு வெளிப்படுத்துவதாகவும், படத்தின் பிரதமராக நடிக்கும் மோகன்லாலைக் கொல்ல வருபவர்களை சூர்யா தடுத்து நிறுத்தி அவரைக் காப்பாற்றுகிறாரா, அல்லது மோகன்லாலைக் கொல்வதற்கான நியாயம் கற்பிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரா என்று ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.