கொழுப்பை குறைக்கும் பிரண்டை! இப்படியெல்லாம் செய்யலாம்!

  0
  9
  பிரண்டை

  பிரண்டைன்னு பேரைக் கேட்டதுமே அது ஏதோ வேற்று கிரகத்துல இருந்து வந்த மூலிகைன்னு நமக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி மருத்தாக மட்டுமே நினைச்சுக்கிட்டு இருக்கிறவங்க தான் அதிகம். பிரண்டை என்பது மருந்தாக மட்டுமல்ல.. நாம சாதாரணமா சமைக்கிற பிற எல்லா கீரைகளையும், காய்கறிகளையும் போல பிரண்டையையும் சமைச்சு சாப்பிடலாம்.

  பிரண்டைன்னு பேரைக் கேட்டதுமே அது ஏதோ வேற்று கிரகத்துல இருந்து வந்த மூலிகைன்னு நமக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி மருத்தாக மட்டுமே நினைச்சுக்கிட்டு இருக்கிறவங்க தான் அதிகம். பிரண்டை என்பது மருந்தாக மட்டுமல்ல.. நாம சாதாரணமா சமைக்கிற பிற எல்லா கீரைகளையும், காய்கறிகளையும் போல பிரண்டையையும் சமைச்சு சாப்பிடலாம். கை கால் குடைச்சலுக்கு உணவே மருந்தா பிரண்டை நல்ல நிவாரணம் தரும். உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்றுவதில் தலைசிறந்தது பிரண்டை. இது தவிர சிலருக்கு எப்பவுமே வாயு உடல்வாகா இருக்கும். உடம்பில் இருக்கும் வாயு பிடிப்பை போக்குவதிலும் சிறந்தது பிரண்டை.

  veld grape

  அதிகளவில் பிரண்டையில் கால்சியம் சத்துக்கள் உள்ளது. அதனால், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளுக்கு பலம் கொடுக்கும், ஈறுகளில் ரத்த கசிவுகள் இருந்தால் அதை அடியோடு  நிறுத்தும் தன்மை பிரண்டைக்கு உண்டு. தசைகளில் வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு பிரண்டை சிறந்த நிவாரணம் தரக்கூடியது. 
  உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளோட ஞாபகசக்தியை பெருக்கும். மூளை நரம்புகளை பலப்படுத்தும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் வனப்பும் பெறும். பொதுவாகவே எல்லோருக்கும் எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவினால் தேவையற்ற நீர் தேங்கி விடும். இதனால முதுகுவலி, கழுத்துவலியால் கஷ்டப்படுறவங்க பல பேர். இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, முறுக்கிக் கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.

  veld

  இந்த பிரண்டையை தொக்கு செய்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களும் இந்த துவையலைச் சாப்பிடலாம். இதை நெய்விட்டு சாதத்துடன் அல்லது சப்பாத்தி, இட்லியுடன் ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து இல்லாமல் செய்கிறது. இதய வால்வுகள் பாதிப்ப்புக்கு உள்ளானோர், அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகி இதயம் பலப்படும்.