கொழுப்புச் சத்தை தவிர்ப்பது நல்லதா?

  0
  17
  சரிவிகித சத்தான உணவு

  நம்முடைய உடல் இயக்க கொழுப்புச் சத்து மிக மிக அவசியம். அப்படி இருக்கும்போது பலரும் வெயிட் லாஸ், வெயிட் மெயிண்டெய்ன் என்ற பெயரில் கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்தை குறைத்து வருகின்றனர். கொழுப்பு நம் உடலுக்கு எவ்வளவு தேவை என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

  கொழுப்பில் எல்.டி.எல், ஹெச்.டி.எல், டிரைகிளசரைட் என்று மூன்று வகைகள் உள்ளன. 

  இதில் எல்.டி.எல் என்பதை கெட்டக் கொழுப்பு என்றும் ஹெச்.டி.எல் என்பதை நல்லக் கொழுப்பு என்றும் கூறுவார்கள்.

  எல்.டி.எல்

  லோ டென்சிட்டி லிப்போபுரோட்டின் எனப்படும் கெட்ட கொழுப்பு நம்முடைய ரத்த நாளங்களில் தங்கி அடைப்பை ஏற்படுத்தக்கூடியது. இதனால் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்தம் செல்வது தடைபடுகிறது. கடைசியில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

  எல்.டி.எல்

  ஹை டென்சிட்டி லிப்போபுரோட்டின் எனப்படும் நல்ல கொழுப்பு உடலுக்கு மிகவும் அவசியமானது. இது அதிகமானால் கெட்ட கொழுப்பு அளவு குறையும். கெட்ட கொழுப்பை சிதைத்து வெளியேற்ற உதவுகிறது.

  ஒருவருக்கு நல்ல கொழுப்பு அளவு இயல்பான அளவில் உள்ளது என்றால் அவருக்கு மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மாரடைப்பு மட்டுமல்ல வேறு எந்த ஒரு இதய நோய் வருவதற்கான வாய்ப்பும் குறைகிறதாம்.

  டிரைகிளசரைட்

  நம் உடலில் அதிகமாக காணப்படும் கொழுப்பு இது. நாம் உட்கொள்ளும் உணவில் ஆற்றல் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமித்து வைக்கப்படுவதையே டிரைகிளசரைட் என்கிறோம். 

  உடலில் டிரைகிளரைட் அதிகமாக இருந்து, அதனுடன் கெட்ட கொழுப்பும் அதிகமாக இருந்தால் ரத்த நாளங்களில் குறிப்பாக இதய ரத்த நாளங்களில் கொழுப்ப படிவது அதிகமாகிறது. இது மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

  எனவே, கொழுப்பு தவறு என்பது தவறான எண்ணம். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயங்க நல்ல கொழுப்ப தேவை. எனவே, கொழுப்பு குறைவான அதே நேரத்தில் நல்ல கொழுப்பு உள்ள உணவுகளை போதுமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  சரிவிகித சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

  தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

  உடல் எடை உங்கள் பி.எம்.ஐ-க்கு ஏற்ற அளவில் பராமரிக்க வேண்டும்.

  சிகரெட், மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

  இந்த எளிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்!