கொலை… நிலபேர ஊழல்…ராஜபக்ச குடும்ப வழக்குகள் என்ன ஆகும்..!?

  0
  4
  ராஜபக்ச குடும்பம்

  மகிந்த ராஜபக்ச  இலங்கை அதிபராக இருந்தபோது,இன்றைய அதிபர் கோத்தபாய ராஜபக்ச ராணுவத்தையும்,அவருடைய இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்ச பொருளாதாரத்தையும் தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.
  மகிந்த ராஜபக்ச பதவியை இழந்ததும் , அதிகாரத்தை பயன்படுத்தி அவரது குடும்ப உறுப்பினர்கள் செய்த குற்றச்செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன

  மகிந்த ராஜபக்ச  இலங்கை அதிபராக இருந்தபோது,இன்றைய அதிபர் கோத்தபாய ராஜபக்ச ராணுவத்தையும்,அவருடைய இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்ச பொருளாதாரத்தையும் தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.
  மகிந்த ராஜபக்ச பதவியை இழந்ததும் , அதிகாரத்தை பயன்படுத்தி அவரது குடும்ப உறுப்பினர்கள் செய்த குற்றச்செயல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன

  rajpaksa

  அவரது மூத்த மகனும்,இன்று வைகோ , திருமாவளவன் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களுக்கு அரசியல் வழிகாட்டியாக அவதாரம் எடுத்து இருப்பவருமான நமல் ராஜபக்சேதான் முதலில் கைதானார்.ஒரு இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கொழம்பு நகரில் 650 மில்லியன் டாலர் ( இந்தியபணத்தில் சுமார் 5 ஆயிரம் கோடி) மதிப்புள்ள நிலத்தை சட்டவிரோதமாக ஒதுக்கியது, ஹலோகார்ப் நிறுவனத்தில் அவர் பெற்ற 125 மில்லியன் ஆகிய குற்றங்களுக்காக 2016 ஜூலை 11ம் தேதி கைது செய்யப்பட்டார் நமல் ராஜபக்ச.

  rajapaksa

  மகிந்தவின் இன்னொரு மகனான ரோகித ராஜபக்ச ஒரு ரக்பி விளையாட்டு வீரர்.இவருக்கும் இன்னொரு விளையாட்டு வீரரான வாசிம் தாஜுதீனுக்கும் இடையே பெண் ஒருவரால் பகை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் 2012 மே மாதத்தில் ஒருநாள் ரோகிதவின் போட்டியாளரான வாசிம் ஒரு எரிந்து போன காருக்குள் கருகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.விசாரணையில் அந்தக்கார் செஞ்சிலுவை சங்கத்துக்குச் சொந்தமானது என தெரிய வந்தது.

  அந்தக்காரை மகிந்த ராஜபக்சவின் மனைவி ஸ்ரீரத்தி ராஜப்க்ச நடத்தும் ஒரு சேவை நிறுவனப் பயன்பாட்டுக்கு ஒதுக்கி இருந்ததாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது.வாசிமைக் கொன்றது மகிந்தவின் செக்யூரிட்டி படைதான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ரோகித கைது செய்யப்பட்டார்.மகிந்தவின் மனைவியும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.புதைக்கப்பட்ட வாசிம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. விசாரணை இன்னும் நடக்கிறது. 

  rajapaksa

  நமலுக்கும் ரோகிதவுக்கும் இடையில் யோஷித ராஜபக்ச என்றொரு மகன் இருக்கிறார் ராஜபக்சேவுக்கு,அவர் இலங்கைக் கடற்படையில் லெஃப்டினெண்ட்டாக பணியாற்றியவர்.இவரும்,மகிந்த ராஜபக்சவின் தனிச்செயளர் ரோகன் வெல்லிவித என்பவரும் பலகோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்கியதாகக் மணிலாண்டரிங் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

  கோத்தபய ராஜபக்சேவின் இன்னொரு சகோதரரும்,மகிந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தையே கையில் வத்திருந்தவருமான பசில் ராஜபக்சேவும் கைது செய்யப்படார்.இவர்மீது அரசு நிலத்தை ஆக்கிரமித்தது,மற்றும் அந்நிய செலவானி மோசடி வழக்குகள் இருக்கின்றன.

  எதிர்கட்சி ஆட்சியில் இருந்தபோதே இவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாய ராஜபக்ச அதிபர் ஆகிவிட்ட நிலையில் இந்தக் கிரிமினல் வழக்குகளும் அவற்றை நடத்திய அதிகாரிகளும் என்ன ஆவார்களோ என்கிற அச்சம் பெரிதாக எழுந்திருக்கிறது இலங்கையில்!