கொலைநகரமான காஞ்சிபுரம்! வேடிக்கைப் பார்க்கும் காவலர்கள்!

  0
  1
   காஞ்சிபுரம்

  தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதாகவும், போலீசார் இவற்றை பெரிதாக கண்டுக் கொள்வதில்லை என்றும் பரவலான பேச்சு பொதுமக்களிடையே இருக்கிறது.  இந்நிலையில், கோயில் நகரம் என்று உலகம் முழுக்கவே கொண்டாடப்படும் காஞ்சிபுரம், தற்போது கொலை நகரமாக மாறியிருக்கிறது.

  sridhar

  அதன் தொடர்ச்சி தான் அத்திவரதரை அத்தனை விஐபிக்களுக்கும் முன்னாடி பிரபல ரவுடிகள் விசேஷ தரிசனம் செய்யும் அளவிற்கு அனுமதி கொடுக்க வைக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள். காஞ்சிபுரத்தில் மறைந்த ஸ்ரீதர் தனபாலனின்  டிரைவர் தினேஷிற்கும், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாவிற்கும் இடையே, அடுத்த ஸ்ரீதர் யார்?  என்கிற போட்டியில் காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்த தொடர் கொலைகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. பொதுமக்கள் மரண பீதியில் உறைந்திருக்கும் நிலையில், போலீசார் இது பற்றி எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  sathish and karunakaran

  ராவுடிகளின் வாரிசு சண்டையில்,  தினேஷின் கூட்டாளிகளும், தணிகா கூட்டாளிகளும் மாறி மாறி நடுரோட்டில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரம் செய்யாறு பகுதியில் டிரைவர் தினேஷின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் என்பவரை ஓடிக் கொண்டிருக்கும் பேருந்தில் சரமாரியாக வெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க வைத்தனர். இதன் எதிரொலியாக தணிகாவின் உறவினரும், ஸ்ரீதரின் சித்தப்பா மகன்களுமான கருணாகரன் மற்றும் விக்னேஷ் இருவரையும் தினேஷ் கூட்டாளிகள் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.