கொலைகாரராக மாறிய  சமையல்காரர் -சமையல் செய்ய வந்து வக்கீலை ‘சம்பவம்’ செய்தார் …

  0
  18
  representative image

  ஜம்முவில், திங்களன்று மின்வாரியத் துறையின் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் ஷெனாஸ் கோனியின் கணவரும் அந்த பகுதியில் பெரிய வக்கீலுமான ரியாஸ் அஹ்மத் புச்ச்சை அவர் வீட்டிற்கு வேலைக்கு வந்த ஒரு சமையல்காரர் கொலை செய்துள்ளார. இந்த சம்பவம் நடந்தபோது அந்த வக்கீல் அவரது கிரேட்டர் கைலாஷ் இல்லத்தில் தனியாக இருந்தார்.

  ஜம்முவில் தனியாக வீட்டிலிருந்த ஒரு வக்கீல்  அவர் வீட்டில் சமையல்வேலைக்கு வந்த ஒரு பீஹாரியால் கொலை செய்யப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
  ஜம்முவில், திங்களன்று மின்வாரியத் துறையின் ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் ஷெனாஸ் கோனியின் கணவரும் அந்த பகுதியில் பெரிய வக்கீலுமான ரியாஸ் அஹ்மத் புச்ச்சை அவர் வீட்டிற்கு வேலைக்கு வந்த ஒரு சமையல்காரர் கொலை செய்துள்ளார. இந்த சம்பவம் நடந்தபோது அந்த வக்கீல் அவரது கிரேட்டர் கைலாஷ் இல்லத்தில் தனியாக இருந்தார்.
  ஆனால் அப்போது அவரது மனைவி வெளிநாடு சென்றிருந்தததாகவும் ,அவரது மகன் மும்பையில் தனது அலுவல் விஷயமாக சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .இந்த சம்பவம் நடந்த பிறகு திடீரென அவரின்  வீட்டில் வேலை செய்த பீகார் சமையல்காரர் தலைமறைவாகி விட்டதால் போலீசார் அவரை சந்தேகப்பட்டு தேடி வருகின்றனர் .மேலும் இந்த கொலை நடந்த போது அந்த வக்கீல் கொலைகாரனோடு போராடியதால் அவர் உடம்பில் ரத்த காயங்கள் இருப்பதாகவும், cctv கேமரா உடைக்கப்பட்டு .பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.