கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கொண்டைக்கடலை

  0
  13
  கொண்டைக்கடலை

  வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்

  சுண்டலில் கறுப்பு, வெள்ளை என்று இரு வகைகள் உண்டு. ஆனால் பெரும்பாலும் சுண்டல் என்று ஆசையோடு நாம் சாப்பிடுவது வெள்ளை சுண்டலைத் தான். ஆனால் கறுப்பு சுண்டலில் தான் அதிக சக்திகள் இருக்கிறது. உறுதியாகவும், இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் இதை அதிகமாக குழந்தைகள் விரும்புவதில்லை.

  அவர்களுக்குப் பிடித்த மாதிரி சமைத்துக் கொடுத்தால் ஆர்வமுடன் உண்பார்கள்.புட்டு, ஆப்பத்துக்குச் சிறப்பு சுவை சேர்க்கும் கேரளக் கடலைக்கறி, கறுப்புக் கொண்டைக்கடலை குழம்புதான். தெற்காசியாவில் பல்வேறு சுவையான உணவு வகைகளில், கறுப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தப்படுகிறது. இதை வறுத்துப் பொடி செய்து, நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் காப்பியைப் போலப் பயன்படுத்தலாம்.கொண்டைக்கடலை

  கறுப்பு கொண்டைக்கடலையில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்புக்கு  காரணமாக இருக்கும் ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, வராமல் பாதுகாக்கும்.கறுப்பு சுண்டலில், கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் ஆசிட் அதிகளவில் இருக்கிறது. வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம். இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.

  வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கறுப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு.
  தொடர்ந்து கறுப்பு சுண்டல் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலமடையும், உடல் உறுதியாகும். பச்சைக் கொண்டைக் கடலையை ஊறவைத்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும். நுரையீரல் தொடர்பான நோய்களும் குணமாகும்.மேலும் இந்த சுண்டலை தினமும் 2-3 டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கிடைக்கும் சத்துக்களைப் பெறலாம். இங்கு ப்ரௌன் நிற சுண்டலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.நுரைஈரல்

  இந்த சுண்டலில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவை உடல் எடை குறைய உதவி புரியும். அதிலும் இதனை தினமும் 1/2 கப் வேக வைத்து சாப்பிட்டு வந்தால், வயிறு நிறைவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல், அதனால் கண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளாமல், உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்கலாம்.
  கறுப்பு சுண்டலில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறையும். அதற்கு தினமும் 3/4 கப் ப்ரௌன் நிற சுண்டலை வேக வைத்து சாப்பிட்டு வாருங்கள்.இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கும். 

  பார்ப்பதற்கு அழகாகவும், சுவையாகவும் இருக்கும் எல்லாமே ஆரோக்கியமானது என்று அர்த்தமில்லை. நிறத்தைப் பார்த்து ஒதுக்காமல், கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு.. என்று தினந்தோறும் ஒரு கைப்பிடியாவது கறுப்பு சுண்டலைச் சாப்பிட்டு பலன் பெறுங்கள்.