“கொரோனா வைரஸ் மீம்ஸ் அனுப்புவதை நிறுத்துங்கள்!” – முன்னணி ரஷ்ய டெலிகாம் ஆபரேட்டர் அறிவுறுத்தல்

  0
  2
  Memes

  கொரோனா வைரஸ் தொடர்பான மீம்ஸ் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என மக்களிடம் முன்னணி ரஷ்ய டெலிகாம் ஆபரேட்டர் கேட்டுக் கொண்டுள்ளது.

  மாஸ்கோ: கொரோனா வைரஸ் தொடர்பான மீம்ஸ் அனுப்புவதை நிறுத்த வேண்டும் என மக்களிடம் முன்னணி ரஷ்ய டெலிகாம் ஆபரேட்டர் கேட்டுக் கொண்டுள்ளது.

  கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் ஏறத்தாழ 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு படரத் தொடங்கியிருக்கிறது. அந்நாட்டில் இதுவரை 8 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் 1500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

  ttn

  இந்த நிலையில், நெட்வொர்க் அதிக சுமையை எதிர்கொள்வதால் கொரோனா வைரஸ் தொடர்பான மீம்களையும், வைரல் வீடியோக்களையும் பகிர்வதை மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மக்களிடம் முன்னணி ரஷ்ய டெலிகாம் ஆபரேட்டரான எம்.டி.எஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் மீம்ஸ்கள் மூலம் ரிலாக்ஸ் ஆவது நல்ல விஷயம் தான். ஆனால் ஆன்லைனில் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது குறித்து பொறுப்பேற்க வேண்டியது அவசியம் உள்ளது என அந்நிறுவன தலைவர் கூறியுள்ளார்.