கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது….. பலி எண்ணிக்கை 75ஆக உயர்வு….

  0
  1
  கொரோனா வைரஸ்

  நம் நாட்டில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது.

  சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் என்பதால் உலகம் எங்கும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

  மருத்துவ பணியாளர்கள்

  நம் நாட்டிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதுமாக புதிதாக 525 கொரோனா நோயாளிகள் கண்டறிப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் இறந்தள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,072ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 485 பேர்.

  மருத்துவ பரிசோதனை

  இதுவரை நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.