கொரோனா வைரஸ் பற்றி சந்தேகம் இருக்கா.. உடனே இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க..குரல் வழி சேவை தொடக்கம்!

  0
  4
  கொரோனா வைரஸ்

  கொரோனாவால் அதிகம் பதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது.

  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ள நிலையில் 166 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொரோனா அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளும் சேவையை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். 

  ttn

  கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை பெற ஐ.வி.ஆர்.எஸ் தானியங்கியின் குரல் வழி சேவையை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் தொடக்கி வைத்தார். இந்த சேவை மூலம் கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் மக்கள் கேட்டறிந்து கொள்ள 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இருப்பது போல தோன்றுபவர்கள், இந்த சேவை மூலம் உடனையாக சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.