கொரோனா வைரஸ் பற்றிய வதந்தி பரப்பிய இரண்டு பேர் கைது!

  0
  2
   arrested

  து குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது மக்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது.  

  உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் மொத்தமாக 37,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில்  7,84,381 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  1,65,035 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,251 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் 67 பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் சூழலிலும், இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது மக்களின் அச்சத்தை இன்னும் அதிகரிக்கிறது.  

  ttn

  இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்த சாமிநாதன், அப்துல்ரகுமான் ஆகியோர் கொரோனா பற்றிய வதந்தி பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.